The website dedicated to tribal welfare to provide healthcare with medical treatment and impart education to the tribals

JEEVA schedule tribe's hospital
ஜீவா பழங்குடி மக்கள் மருத்துவமனை

அன்புடையீர்,

வணக்கம். தேச பக்தர் ஜீவாவின் நூற்றாண்டில் அடிப்படை வசதிகள் ஏதும் பெறாமல் அவதிப்பட்டு வரும் பர்கூர் மலைவாழ் மக்களின் நலவாழ்வுக்கு உதவும் ஒரு நலவாழ்வுப் பணியைத் திட்டமிட்டோம்.

இப்போது ஈரோடு மாவட்டம், பர்கூர் மலைப்பகுதியில் அமைந்துள்ள தாமரைக்கரையில் அதற்கான இடம், கிராமங்கள்தோறும் சென்று நலவாழ்வுப் பணியாற்றும் இரண்டு மருத்துவ பணியாளர்கள், இவற்றை நடத்துவதற்கான பதிவு செய்யப்பட்ட அமைப்பு என அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்துள்ளோம்.

இனி இதற்கான கட்டிடம், செயல்பாட்டுத் தேவைகள் பெற வேண்டும். நமது செயல்பாடுகள் பற்றி விளக்கமாக இத்தளத்தில் எழுதுகிறோம்.

எளியோர் துயர் துடைக்கும் இப்பணிக்கு உதவ


தாங்கள் அறக்கட்டளையின் உறுப்பினராகி இந்த நற்பணி சிறப்பாக நடைபெற ரூ.10000/
   வழங்கி அறங்காவலராவீர்.

ரூ 1000/- ஆண்டுக்கொரு முறை செலுத்தி ஒரு நாள் மருத்துவச் செலவுக்கு உதவுவீர்

அரிசி, உணவுப்பொருள் வழங்கி முதியோர்க்கு உதவுவீர்

ஒரு நாள் உணவு வழங்க ரூ. 500/ நன்கொடை வழங்குவீர்

மருத்துவமனைகள், தொண்டு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தொழிலதிபர்கள்
   அறங்காவலராகி உதவ அழைக்கிறோம்.

மருத்துவர்கள், மருத்துவ சங்கங்கள், தொண்டு நிறுவனங்கள் ஆண்டுக்கொரு முறை
   மருத்துவ முகாம் நடத்தி உதவவும், மருந்து மாதிரிகள் தந்து உதவவும்
   வேண்டுகிறோம்.

இப்பணி தொடர்ந்து நடைபெறக் குறைந்தது ரூ. 4 லட்சம் வைப்பு நிதி தேவை. தங்கள்
   சிறு உதவியும் இப்பணிகள் நடக்கப் பெரும் உதவியாகும்.

மனிதாபிமானம் மிக்க நண்பர்களையும் இம்முயற்சியில் பங்கேற்கச் செய்யுங்கள்.

தாங்கள் இம்மலைவாழ் மக்களின் நல்வாழ்வுக்கு உதவியருள அன்புடன் வேண்டுகிறோம்.

நன்றி!

          
    (Dr. V. ஜீவானந்தம்)             (V.P. குணசேகரன்)
அலைபேசி:   9442272773               9442755120
மின்னஞ்சல்:   jeeva@healthcareall.org           vpg@healthcareall.org


Designed and maintained by AKR Consultants